

ச.கார்த்திகேயன்
சென்னை
மாவட்டங்கள் வாரியாக மழை முன்னெச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆராய்ச்சி மையத்தின் புதிய முயற்சி, பொதுமக்கள் மத்தி யில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் பலர் தன்னார்வ அடிப்படையில் வானிலை நிலவரங்களை கணித்து கூறி வருகின்றனர். சிலர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும், சிலர் சென்னைக்கு மட்டும் என வானிலை நிலவரங்களை கூறி வருகின்றனர். மன்னார்குடியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ந.செல்வகுமார் ஒருபடி மேலே சென்று, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக வானிலை நிலவரங்களை கணித்து கூறி வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் வானிலை நில வரத்தில் லேசான மழை, கனமழை, மிக கனமழை, அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் விவரங்களை வழங்கி இருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பால சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தனியார் யாரும் சொந்த ரேடார், செயற்கைக்கோள் தரவுகள் மூலம் வானிலை நிலவரங்களை கூறுவதில்லை. சென்னை வானிலை ஆய்வு மைய இணைய தள தரவுகள்தான் அவர்களின் அடிப்படை ஆதாரம். இம்மையம், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக் கானதல்ல. 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, துறைமுகங் கள், மீன்வளத் துறை, சுற்றுலாத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்டவற்றுக்கு ஏற்றவாறு வானிலை நிலவரங்களை உடனுக் குடன் கணித்து, முன்னெச்சரிக்கை தகவலாக தெரிவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கும் தகவல் அனுப்ப வேண்டும். அதனால் மாவட்ட வாரி யாக கணித்து கூற முடியவில்லை.
சென்னை வானிலை ஆய்வு மைய பணிகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம். நான் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக அன்றாட மற்றும் பருவகால மழை விவரம், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட விவரங்களை வானிலை ஆய்வு மைய இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், தமிழில் வெளியிட்டு வருகிறோம்.
பிற்பகலில் கொடுக்கும் பேட்டி கள், அடுத்த நாளும் தொலைக் காட்சிகளில் காட்டப்படுவதாகவும், அது எப்போதைய வானிலை நிலவரம் என அறிய முடியவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அட்டை வாயிலாக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். அவரின் புகாருக்கு முக்கியத்துவம் கொடுத்து, நான் பேட்டி அளிக்கும் அறையில் எனக்கு பின்னால் நாட்காட்டியுடன் கூடிய டிஜிட்டல் கடிகாரத்தை நிறுவி இருக்கிறோம்.
மேலும் பெரிய தொலைக் காட்சியை நிறுவி, வானிலை நிலவரங்களை வரைபடங்கள் மூலமும் விளக்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தற்போது மாவட்டவாரியாக வானிலை நிலவரங்களை கூறி வருகிறோம். விரைவில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை அளவிலும் வானிலை முன்னறி விப்பை வழங்க திட்டமிட்டிருக்கி றோம். வரும் காலங்களில் மக்களுக்கு ஏற்ற வகையில் புதுப் புது மாற்றங்கள் கொண்டுவரப் படும். இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.