Published : 31 Oct 2019 09:37 AM
Last Updated : 31 Oct 2019 09:37 AM

அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால் தேஜஸ் ரயிலில் வீடியோ வசதியை நீக்க முடிவு: பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர பயணிகள் கோரிக்கை

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சொகுசு விரைவு ரயிலில் இருக்கும் வீடியோ திரைகளில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், பொழுதுபோக்கு அம்சங்களை நிறுத்தி வைக்க ரயில்வே வாரியம் முடிவு செய் துள்ளது. இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தரத்துடன் பல் வேறு சிறப்பு அம்சங்களோடு சென்னை பெரம்பூர் ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகளுடன் தேஜஸ் ரயில் கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், சமீபகாலமாக இந்த ரயிலில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் தொழில்நுட்ப குளறு படிகள் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாட்டு தொழில்நுட்பம் மூலம் தேஜஸ் ரயில் பெட்டிகளில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘இன்ஃபோ டெக்’ வசதியில் வீடியோ திரை களில் அடிக்கடி தொழில்நுட்ப குறை பாடு ஏற்படுவதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் வந்து ஆய்வு செய்தனர். தொழில் நுட்ப கோளாறால் சேவை பாதிப் பதைவிட, பயணிகள் அதை பயன் படுத்தும்போது ஏற்படும் குளறுபடி களால்தான் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது என தெரியவந் துள்ளது.

எனவே, தற்போதுள்ள பொழுது போக்கு அம்சங்களை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. பயணிகள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்று வசதியை கொண்டு வருவது குறித்து ரயில்வே வாரியம் முடிவு செய்யும். மேலும், வைஃபை வசதியை விரைவில் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘இந்த ரயிலில் சரியான நேரத்துக்கு பயணிக்க முடிகிறது. ஆனால், சமீபகால மாக பயணிகளுக்கான பொழுது போக்கு அம்சங்களில் அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது.

குறிப்பாக, வீடியோக்கள் திரைகளில் அடிக்கடி பழுது ஏற்படு கிறது. லைவ் டிவி முழுமையாக செயல்படுவதில்லை. மேலும், பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களில் பழைய, புதிய அம்சங்கள் நிறைந்த படங்கள், நகைச்சுவை வீடியோக்கள் இணைக்காமல் இருக்கின்றன.

எனவே, மற்ற ரயில் களைவிட அதிக கட்டணம் செலுத்தி பயணிப்பவர்களுக்கான சேவையை மேம்படுத்தும் வகை யில் ரயில்வே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொழுது போக்கு அம்சங்களை முற்றிலுமாக நீக்கக் கூடாது. இதற்கு மாற்று ஏற் பாடுகளை செய்ய வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x