Published : 31 Oct 2019 08:46 AM
Last Updated : 31 Oct 2019 08:46 AM

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாத குற்ற உணர்வால் தவிக்கிறோம்: அருகில் தோண்டிய குழிக்குள் இறங்கி வெளியே வந்த வீரர் வேதனை

இ.ராமகிருஷ்ணன்

சென்னை

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் கடந்த 25-ம் தி தனது வீட்டு அருகே இருந்த 650 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் நிகழ்ந்தது. 15 அடி ஆழத் தில் சிக்கிய குழந்தை படிப்படியாக 88 அடி ஆழம் வரை சென்றது. சுமார் 80 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அதி காலை சுஜித் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடும் முயற்சிகளுக்குப் பிறகு குழந்தையை மீட்க அருகில் இரண்டடி தூரத்தில் மற்றொரு குழி தோண்டப்பட்டது. திங்கள்கிழமை மதியம் 45 அடி ஆழம் தோண்டப் பட்ட நிலையில் குழிக்குள் பாறை யின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலை குறித்து அறிய வேண்டி இருந்தது. இதற்காக தீயணைப்பு வீரரை கயிறு கட்டி உள்ளே இறக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த குழி வழியாகச் சென்று மற்றொரு ஆழ்துளை கிணற்றுக் குள் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தை மீட்கவும் திட்டமிட்டப்பட்டு அதற்காக 3 வீரர்கள் தேர்வு செய்யப் பட்டனர். முதல் கட்டமாக திருச்சி தீயணைப்பு காவல் நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு படை வீரர் நகைமுகன் அருகில் தோண்டப் பட்ட 45 அடி ஆழ குழிக்குள் இறங்கி விட்டு மேலே வந்தார்.

இதுகுறித்த ‘இந்து தமிழ்' நாளிதழிடம் அவர் கூறியதாவது: திருச்சி மாவட்டம் நவல்பட்டு பர்மா காலனி சொந்த ஊர். அப்பா உதய குமார். தீயணைப்பு படையில் பணி புரிகிறார். சுஜித் மீட்பு பணிக்காக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் இயக்குநர் (டிஜிபி) காந்தி ராஜன் திருச்சி வந்திருந்தார். அப் போது அவர் அருகில் தோண்டப் பட்ட குழிக்குள் இறங்க 3 பேரை தேர்வு செய்து விட்டீர்களா அதிகாரி களிடம் கேட்டார். அவரிடம் நான் இறங்குகிறேன் என நம்பிக்கையு டன் தெரிவித்தேன். உன்னால் முடியுமா என்று டிஜிபி கேட்டார்.

திருச்சி உப்பிலியபுரத்தில் மீட்பு பணி செய்துள்ளதையும் அங்கு ஒன்றரை மாதத்தில் 40-க்கும் மேற் பட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தையும், எனக்கு பயம் இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தேன்.

இதன்தொடர்ச்சியாக அருகில் தோண்டப்பட்ட குழிக்குள் மண் மற்றும் பாறை தன்மையை அறிந்து கொள்ள திங்கள்கிழமை மதியம் கயிறு மூலம் இறங்கினேன். உள்ளே அதிக வெப்பம் இருந்தது. கடின பாறைகளும் இருந்ததை உணர முடிந்தது.

அடுத்தடுத்த மீட்பு பணிகளால் எப்படியும் குழந்தையை மீட்டு விடு வார்கள் என லட்சக்கணக்கான மக் கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்தனர். அந்த நம்பிக்கையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் தவிக்கிறோம். தூங்க முடியவில்லை, உணவருந்த இயலவில்லை. எப்போதும் சுஜித் நினைவாகவே உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x