Published : 30 Oct 2019 11:24 AM
Last Updated : 30 Oct 2019 11:24 AM

விபத்தில்லாத பயணம் என்பதே இலக்கு; அரசு பேருந்துகளின் சாலை விபத்து உயிரிழப்பு 28% குறைந்தது: மேலும் குறைக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தகவல்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

தமிழகத்தில் அரசு பேருந்துகளின் சாலை விபத்து 22 சதவீதமாகவும், உயிரிழப்பு 28 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மேலும், விபத்து இல்லாத பயணத்தை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டு பணியாற்றுவதாக அரசு போக்குவரத் துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 12,216 பேர் உயிரிழந்தனர். இவற்றில், 50 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலை களில் நடந்துள்ளன. சாலை விதி களை மீறுவோர் மீது ஓட்டுநர்களின் உரிமம் ரத்து, அபராதம் விதிப்பு, அதிக விபத்துகள் நடக்கும் இடங் களைத் தேர்வு செய்து கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மொத்த விபத்துகளில் 7,400 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறை வாகும். மக்களின் பிரதான போக்கு வரத்துகளான அரசு மற்றும் தனி யார் பேருந்துகளில் சாலை பாது காப்பு அம்சங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இத னால், அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவது குறைந்துள்ளது.

உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி கூறியதாவது:

தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க சாலை பாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதி முறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். மாதம்தோறும் மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதிக விபத்து ஏற்படும் இடங் களில் வேகத்தடை, தடுப்புகள் அமைத்தல், சிவப்பு ஒளிர்பட்டை கள் அமைத்தல் போன்ற கட்ட மைப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. போக்குவரத்து, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகி யவை இணைந்து பணியாற்றி வருவதால் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் 2017-ல் நடந்த வாகன சாலை விபத்துகளில் 17 ஆயிரமாக இருந்த இறப்பு எண்ணிக்கை 2018-ல் 12,300 ஆகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 7,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 2020-ல் 50 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில்லாத பயணமே இலக்கு

அரசு போக்குவரத்துக் கழகங் களின் மூத்த அதிகாரிகள் கூறிய தாவது:

அரசு பேருந்துகளின் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகை யில் புதிய பேருந்துகளை அதிகரித் தல், பராமரிப்புப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுதல், ஓட்டுநர்களுக்கு போதிய பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். 8 அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் மாதம் ஒருமுறை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு விபத்து தடுப்பது தொடர்பாக நேரடியாக பயிற்சி அளிக்கிறோம். இதுதவிர, 15 நாட்களுக்கு ஒருமுறை சாலை விபத்தைத் தடுப்பது தொடர்பாக வும் பயிற்சி அளிக்கிறோம்.

சமீபத்தில் நடக்கும் சாலை விபத்துகளை உதாரணம் காட்டி, விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து எவ்வாறு செயல் பட்டு இருந்தால் அந்த விபத்தைத் தடுத்திருக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிப்பதால், ஓட்டுநர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

உடல்நிலை சரியில்லாத ஊழி யர்களுக்கு மாற்றுப்பணி வழங்குகிறோம். இதனால், அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவது கணிசமாகக் குறைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் விபத்தில்லாத பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல் படுகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x