காவலரிடம் சவால்விட்ட கடைக்காரர்; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’: வாட்ஸ்-அப்பில் வைரலான வீடியோவால் நடவடிக்கை

காவலரிடம் சவால்விட்ட கடைக்காரர்; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’: வாட்ஸ்-அப்பில் வைரலான வீடியோவால் நடவடிக்கை
Updated on
2 min read

சென்னை

சென்னையில் காவலரிடம் சவால் விட்ட பாஸ்ட் புட் கடைக்காரர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதும் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டதால் அந்தக் கடைக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

சென்னை புதுப்பேட்டை ஆதித் தனார் சாலையில் ‘பிரண்ட்ஸ் பாஸ்ட் புட்’ கடை உள்ளது. இந்தக் கடைக்கு புதுப்பேட்டையில் தங்கி ஆயுதப்படையில் பணியாற்றும் திருச்சியைச் சேர்ந்த காவலர் சரவ ணன், நேற்று முன்தினம் இரவு சாப் பிடச் சென்றார். அப்போது அவருக்கு, வாழை இலைக்குப் பதில் தடை செய்யப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தோசை கொடுத் துள்ளனர். இதனால் அதிர்ச்சி யடைந்த சரவணன், பணம் வாங்கும் இடத்தில் இருந்தவரிடம், பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவது குறித்த விவரம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், “இதைக் கேட்க நீ யாரு, மாநகராட்சி அதிகாரிகள்தான் கேட்க வேண்டும், நீ போலீஸ் தானே” என்றார். உடனே சரவணன், ‘நான் போலீஸ்காரர் என்ற முறையில் கேட்க வில்லை. பொதுமக்களில் ஒருவனாக கேட்கிறேன்” என்று கூறினார். இதை யடுத்து, சரவணனின் செல்போன் நம் பரைக் கேட்டு வாங்கிக் கொண்ட அந்த நபர், “நாளைக்கு மார்க்கெட் டுக்கு 10 மணிக்கு வா.. கட்டாயமா வரணும்.. நான் அங்கு வைத்து பதில் சொல்கிறேன்” என்று கூறுகிறார். அதற்கு சரவணனும் “சரி வரு கிறேன்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தையும் சரவணன் தனது செல்போனில் பதிவு செய்தார்.

அந்த வீடியோ காட்சிகளை காவல் துறையைச் சேர்ந்த வாட்ஸ் அப் குழுவுக்கு அனுப்பினார்.

பின்னர் அந்த வீடியோ காட்சிகள் வைரலானது. இது சென்னை மாநக ராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் அந்த பாஸ்ட் புட் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கடை உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. உரிமம் இல்லாமல் கடை நடத் துவதுடன், உண்ண தகுதி இல்லாத பழைய உணவுகளை பார்சல் செய்து வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கிருந்து 20 கிலோ உணவுகளும் 2 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததற்காக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தியதற்காகவும் சுகாதாரமற்ற முறையில் உணவகம் பாரமரிக்கப் பட்டதாலும் கடையை பூட்டி மாநக ராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து காவலர் சரவணன் கூறும்போது, “வீடியோ எடுக்க வேண் டும், தகராறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்கப்படுமே என்று தான் அவரிடம் கூறினேன். ஆனால் அந்த நபர், என்னிடம் மிரட்டும் தொனியில் பேசினார். அதனால்தான் செல்போனில் வீடியோவை ஆன் செய்தேன். அதைக் கவனித்த அந்த நபர், வீடியோவை நல்லா எடு என அலட்சியமாகக் கூறினார்" என்று தெரிவித்தார்.

“அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவை மீறி தவறு செய்யும் நபர் ஒருவர் போலீஸ்காரரையே மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. ஆனால் அந்த நபர் மீது இன்னும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்ல” என்று போலீஸார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரமற்ற உணவு

“சென்னையில் தங்கும் விடுதிகள் அதிகம் இருக்கும் திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலை, சைதாப்பேட்டை உட்பட பல பகுதிகளில் சுகாதார மற்ற முறையில் உணவுகள் தயாரிக் கப்பட்டும், கெட்டுப்போன உணவு களும் விற்பனை செய்யப்படுகின் றன. இந்த பகுதிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வதற்கு கூட செல்வதில்லை. மேலும் பெரும்பாலான இறைச்சிக் கடைகளிலும் சாலையோர உணவுக் கடைகளிலும் பார்சலுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருட் களையே பயன்படுத்துகின்றனர். தற் போது பிரண்ட்ஸ் பாஸ்ட் புட் கடைக்கு சீல் வைத்திருக்கும் அதிகாரிகள், பாரபட்சம் இல்லாமல் அனைத்து கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in