தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
Updated on
1 min read

சென்னை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றங் கள் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டி ருப்பதாவது:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன் னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அண்ணா சாலையில் போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்படு கின்றன.

சைதாப்பேட்டையிலிருந்து நந் தனம், சேமியர்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை லிங்க் சாலை சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வி.என்.சாலை - தெற்கு போக் சாலை - தியாகராயா சாலை - எல்டாம்ஸ் சாலை - கே.பி. தாசன் சாலை வழியாகச் செல்லலாம்.

தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் - அண்ணா சாலை - செனடாப் ரோடு சந்திப்பு வழியாக கோட்டூர்புரம் பாலம் - காந்தி மண்டபம் சாலை - சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாகச் செல்லலாம்.

ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, அண்ணா சாலை - செனடாப் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் கோட்டூர்புரம் நோக்கி அனுமதிக் கப்படும். கோட்டூர்புரத்தில் இருந்து அண்ணா சாலை நோக்கி வாக னங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

போக்குவரத்து அதிகமாக இருந் தால் நந்தனம் சந்திப்புக்கு வரக் கூடிய வாகனங்கள் அனைத்தும் அதற்கு முன்பாக வேறு வழியாகத் திருப்பி விடப்படும். இந்த மாற்றங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என காவல்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in