Published : 30 Oct 2019 08:54 AM
Last Updated : 30 Oct 2019 08:54 AM

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக தமிழகத்தில் ஒப்பந்த சாகுபடிக்கு தனிச் சட்டம்;  குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்: விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை உறுதியாகும்

சென்னை

விவசாயிகளின் வருமானம் அதி கரிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது: வேளாண் பெருமக்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ் நாடு அரசு பல்வேறு முக்கிய கொள்கை முடிவு களை வகுத்துள்ளதோடு, புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. தமிழ் நாட்டில் கரும்பு, இறைச்சிக் கோழி, மூலிகைப் பயிர்கள் போன்ற இனங் களில் ஒப்பந்த சாகுபடி முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்கான சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை.

இதனை கருத்தில்கொண்டு, ஒப்பந்த சாகுபடி முறையில் ஈடு படும் வேளாண் பெருமக்களின் நலனைப் பாதுகாப்பதற் காக, முதல்வர் பழனிசாமி கடந்த 2018-2019-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ‘விவ சாய உற்பத்தியைப் பெருக்கவும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்’ என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019-க்கான சட்ட முன்வடிவுக்கு கடந்த 14.2.2019 அன்று சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்டத்துக்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று, பிரத்யேகமாக எந்தச் சட்டமும் எந்த மாநிலத் திலும் இதுவரை இயற்றப்படாத நிலையில், தமிழக அரசுதான் முதன்முதலில் தனிச்சட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்தச் சட்டத்தின்படி, கொள் முதலாளர் அல்லது உணவு பதப் படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்களது விளை பொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய் யப்பட்ட பொருட்களை, ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய் வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகை யில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய் துள்ள கொள்முதலாளர் அந்தப் பகுதியைச் சார்ந்த வேளாண் விற் பனை மற்றும் வேளாண் வணிகத் துறையினால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடனான ஒப்பந்தத்தை அலுவலர் முன்னிலை யில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. அதிக விளைச்சல் காரணமாக, விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சட்டத்தால், விவசாயிகளுக்கு எந்தவித பொருள் மற்றும் பண இழப்பும் ஏற்படாமல், முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய் யப்பட்டுள்ளது. இதனால், விவ சாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப் படுகிறது.

வியாபாரிகளும் உணவு பதப் படுத்தும் தொழிற்சாலைகளும் அவர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை, நல்ல தரத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். இதற் கான இடுபொருட்களையும் தொழில்நுட்பங்களையும் விவ சாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங் களில் இருந்து பெறவும் வாய்ப்புள்ளது.

ஒப்பந்த பண்ணைய சாகுபடி முறையால் விவசாயிகளுக்கும் வேளாண் சார்ந்த தொழிற்சாலை களுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும். விதைப்பு காலத்துக்கு முன்னரே விளைபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவ தால், அனைத்து தொழில் நுட்பங் களையும் பின்பற்றி, அதன்மூலம் விளைச்சல் அதிகரித்து, விவசாயி களுக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு ஏற்படும்.

விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தில், கொள் முதலாளரோ அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனமோ ஒப்பந்த விதிகளை மீறும் போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் களைந்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்குரிய தொகையைப் பெற்றுத்தரும் வகையில், அனைத்து பாது காப்பு நடவடிக்கைகளும் இச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இதில் ஏற்படும் இன்னல் களை வருவாய் கோட்ட அளவிலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலும் களைந்திட அமைப்புகள் ஏற்படுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு, மத்திய அரசு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளைபொருட்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் இயற்றப்பட்ட விதி களின்கீழ் ஒப்பந்தம் செய்ய இய லாது.

இந்த சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரு வதற்கான சட்ட விதிகளை உடனடி யாக வகுத்து, முழுச்செயலாக் கத்துக்கு கொண்டு வருமாறு முதல்வர் பழனிசாமி, வேளாண் மைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x