Published : 29 Oct 2019 05:02 PM
Last Updated : 29 Oct 2019 05:02 PM

திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட உறுதிமொழி ஏற்ற ராமேசுவரம் பள்ளி மாணவர்கள் 

ராமேசுவரம்

பயன்பாடின்றி திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட ராமேசுவரம் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், உயிரிழந்த சுஜித்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சுஜித்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த மாணவர்கள், பயன்பாடின்றி திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் உறுதிமொழி ஏற்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான்.

குழந்தையை மீட்க உலகெங்கும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை தொடங்கிய மீட்புப் பணி திங்கட்கிழமை 4-வது நாளாகவும் முழுவீச்சில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொது மக்கள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்பப் பிரார்த்தனை செய்தனர். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டாகியது.

குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 80 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணி தோல்வியில் முடிந்தது. செவ்வாய்க்கிழமை அதிகலாலை காலை 4-30 மணி அளவில் 88 அடி ஆழத்திலிருந்த சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவனின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப்பின் அமைச்சர்கள் சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்னர் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்குப் பின்னர் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், உயிரிழந்த சுஜித்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். சுஜித்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த மாணவர்கள், பயன்பாடின்றி திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் உறுதிமொழி ஏற்றனர்.

அக்னி தீர்த்தத்தில் அஞ்சலி..

அதேபோல், சுஜித்துக்காக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் காலை 11 மணிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் சே.முருகானந்தம் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் மோகன்தாஸ், ஏஐடியுசி ஆட்டோ சங்கர் தாலுகா செயலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x