

சென்னை
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளர்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பின் அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சுஜித்தின் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை சுஜித் இறந்ததற்காக வருந்துகிறேன். துக்கமடைந்துள்ள பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் இரங்கல்கள்," என பதிவிட்டுள்ளார்.