

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களுக்கு வசதியாக 9,998 பேருந்துகளும் தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு 6,698 பேருந்துகளும் என மொத்தம் 16,696 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யவும் பண்டிகையை முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பவும் வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரூ.8.32 கோடி வருவாய்அதன்படி, கடந்த அக். 24, 25, 26 தேதிகளில் சென்னை கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து மொத்தம் 11,111 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 6,70,630பயணிகள் சொந்த ஊர்களுக்குபயணம் செய்தனர். இதன்மூலம் போக்குவரத் துக் கழகத்துக்கு ரூ.8.32 கோடி வருவாய் கிடைத் துள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள பயணிகள் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், அக். 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஏறத்தாழ 9,998 பேருந்துகள், பிறபகுதிகளில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 6,698 பேருந்துகளும் என மொத்தம் 16,696 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
6 பேருந்து நிலையங்களில்.. சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்றும் இன்றும் 2 நாட்களுக்கு 200 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன.