

நடுக்காட்டுப்பட்டி
நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க அருகில் தோண்டப்படும் குழியில் மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பனி இந்த நிமிடம் வரை முழுவீச்சில் நடந்துவருகிறது.
ரிக் இயந்திரங்கள் மூலம் அருகில் குழி தோண்டப்பட்டது. முதல் இயந்திரம் பழுதானதால் 2-வதாக ஓர் இய்ந்திரம் மூலம் துளையிடப்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று (அக்.28) காலையில் 2-வது ரிக் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. போர்வெல் இயந்திரம் மூலம் 65 அடி ஆழம் வரை 6 இடங்களில் துளையிடப்பட்டது.
தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்படுகிறது. 65 அடிவரை ரிக் இயந்திரம் மூலம் பாறைகளை நொறுக்கி அகலப்படுத்திய பின்னர் மீண்டும் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எஞ்சிய 35 அடியையும் இதேபோல் போர்வெல், ரிக் இயந்திரங்கள் மூலம் ஆழ, அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பக்கவாட்டில் ஆழ்துளைகளை இணைப்பதற்கான துளையைப் போடக்கூடிய கருவி கோவையில் இருந்து வரவழைக்கப்படுகிறது.