

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் என திருச்சி ஆட்சியர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சக்தி வாய்ந்த இன்னொரு ரிக் இயந்திரமும் வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது எந்த விட அதிர்வும் ஏற்படாதவாறு குழி தோண்டப்படுகிறது என்றார்.
இந்நிலையில் மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்தத் துயரச் சம்பவம் காரணமாக தீபாவளி கொண்டாடப்படவில்லை என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “இதுவரை 4 மணிநேர முயற்சியில் 34 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு உள்ளது. சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்கும் பணிகள் 42 மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் குழியானது முழுமையாக தோண்டப்படும் என திருச்சி ஆட்சியர் சிவராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.” என்றார்