Published : 27 Oct 2019 09:29 am

Updated : 27 Oct 2019 09:30 am

 

Published : 27 Oct 2019 09:29 AM
Last Updated : 27 Oct 2019 09:30 AM

பாதாள சாக்கடை பணிகளால் சாலைகளில் பள்ளம்: கந்தசாமி கோயில் சஷ்டி உற்சவம் பாதிப்பு; திருப்போரூர் பொதுமக்கள் குற்றச்சாட்டு

kandhasamy-temple-function

திருப்போரூர்

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியான முறையில் சீரமைக்கப்படாததால், கந்தசாமி கோயிலின் சஷ்டி உற்சவத்தின்போது சுவாமி ஊர்வலம் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழக அரசுசார்பில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது. இதன்பேரில், தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை தொடங்கியது.

பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவு நீர் உந்து நிலையங்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 4.02 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேரூராட்சி பகுதியில் 23.49 கி.மீ நீளத்துக்கு பாதாள சாக்கடை குழாய் புதைக்கும் பணிகள் மற்றும் 861 சாக்கடை புழை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியான முறையில் மண்கொட்டி மூடாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்போரூர் பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால், கந்தசுவாமி கோயிலின் 4 மாடவீதிகளில் அரைகுறையாக மூடப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் சகதிகள் தேங்கியுள்ளதால் சஷ்டி உற்சவத்தின்போது சுவாமி வீதியுலா வருவதில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதனால், மேற்கண்ட பள்ளங்களை சரியான முறையில் மண்கொட்டி மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இகுறித்து, திருப்போரூர் பகுதிவாசிகள் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான பள்ளங்களை அரைகுறையாக மூடியுள்ளதால், மழைநீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பிரசித்திப் பெற்ற கந்தசாமி கோயிலில் நாளை சஷ்டி உற்சவம் தொடங்குவதால், நாள்தோறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால், சாலைகள் மேடு பள்ளங்களாகவும் மற்றும் சகதிகளாகவும் உள்ளதால், சாமி வீதியுலாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து, திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: கந்தசுவாமி கோயிலில் உற்சவம் தொடங்க உள்ளதால், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக 4 மாடவீதிகளிலும் தோண்டப்பட்ட பள்ளங்களை சரியான முறையில் மண்கொட்டி மூடவேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இரண்டு முறை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் என கருதுகிறோம் என்றார்.



பாதாள சாக்கடை பணிசாலைகளில் பள்ளம்கந்தசாமி கோயில் சஷ்டி உற்சவம்திருப்போரூர் பொதுமக்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x