குழந்தை சுஜித்தின் குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம்: நலனுடன் மீட்கப்பட வேண்டும்; ஸ்டாலின்

ஸ்டாலின் - குழந்தை சுஜித்தின் கைகள்
ஸ்டாலின் - குழந்தை சுஜித்தின் கைகள்
Updated on
1 min read

சென்னை

குழந்தை சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.26) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "மனம் கனக்கிறது! குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in