திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: மீட்புப் பணிகள் தீவிரம்

பிரதிநிதித்துவ படம்.
பிரதிநிதித்துவ படம்.
Updated on
1 min read

திருச்சி,

திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. குழந்தை வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த போது 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான்.

மணப்பாறையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆழ்துளை கிணற்றில் குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதாக தொலைக்காட்சியின் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தையைக் காப்பாற்ற சிறப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் குழு அங்கேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தைக்கு பிராணவாயு செலுத்தப்பட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு ஆட்சியரும் அமைச்சர் ஒருவரும் விரைந்துள்ளனர். தற்போது 27வது அடியில் குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in