

தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை (எஸ்ஐஆர்) கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதுவரை 6.30 கோடி படிவங்கள் (98 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் 5.22 கோடி (81 சதவீதம்) வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இப்பணி டிச.4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இறுதிநாள் வரை காத்திருக்காமல், வரும் நாட்களிலேயே படிவங்களை வழங்க வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை கொடுக்காவிட்டால், டிச.9-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம்பெறாது. அதன் பிறகு படிவம் 6-ஐ கொடுத்து தான் வாக்காளராக சேர வேண்டிருக்கும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.