

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவ லகத்தின் போலி முத்திரையைப் பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு மின் இணைப்பு மற்றும் பல்வேறு தடையில்லாச் சான்றுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால், வருவாய்த்துறையினர் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் வட்டத்தில், நகராட்சி, திருட்புக்குழி, சிறுகாவேரிப்பாக்கம், பரந்தூர், கோவிந்தவாடி, சிட்டியம்பாக்கம் என 6 குறுவட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று, பட்டா வழங்குவது, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கும் பணிகளை வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சான்றுகளுக்காக பொதுமக்களை அலையவிடக் கூடாது என்பதற்காக, இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு சான்றுகள் வழங்கப்படுகின்றன.
இ-சேவை மையம் மூலம் சான்றுகள் வழங்கப்படுவதால், போலிகள் தடுக்கப்படும் என அதிகாரிகள் கருதி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக முத்திரை யைப் போன்றே, போலி முத்திரையைப் பயன்படுத்தி பல்வேறு போலிச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ள சம்பவம், வருவாய்த்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலி முத்திரை, வட்டாட்சியர் கையொப்பத்தைப் பயன்படுத்தி கோனேரிக்குப்பம், சின்ன ஐயங்குளம், விஷ்ணுகாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கு, மின் இணைப்பு பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
போலி முத்திரையைப் பயன்படுத்தி பெறப்பட்ட தடையில் லாச் சான்றுடன் சிலர் மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளனர். இதைப் பார்த்த மின்வாரிய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள காஞ்சிபுரம் வாட்டாட்சியர் அலுவலகத்துக்கு தடையில்லாச் சான்றிதழின் உண்மை தன்மையை விளக்கும்படி மின்வாரியம் கடிதம் அனுப்பியது. போலி சான்றிதழ் தொடர்பான மின்வாரியத்தின் கடிதத்தையும் போலி சான்றி தழையும் பார்த்த வருவாய்த் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து வருவாய் துறையினர் மேற்கொண்ட நடவடிக் கையினால், முதல் கட்டமாக 15 போலி சான்றுகள் பிடிபட்டுள்ளன.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1970-களில் தமிழ்நாடு அரசு கோபுர சின்னத் துடன், வட்டார நிர்வாக நடுவர் காஞ்சிபுரம் என்பதை ஆங்கி லத்தில் குறிக்கும் வகையில் TALUK EXECUTIVE MAGISTRATE KANCHIPURAM எனப் பொறிக்கப் பட்ட முத்திரை பயன்பாட்டில் உள்ளது. 1970-களில் தயாரிக்கப் பட்ட முத்திரை என்பதால் இதில் தற்போது பல்வேறு எழுத்துக்கள் சரிவர தெரியாமல் உள்ளன.
போலி முத்திரை தயாரித்த நபர்கள், அரசு கோபுர சின்னத்துடன் வட்டாட்சியர் காஞ்சிபுரம் என, தமிழில் போலி முத்திரையைத் தயாரித்துள்ளனர். இதைப் பயன்படுத்தி போலி சான்றிதழ்களை வழங்கி வந்தது தெரியவந்துள்ளது.
போலி முத்திரை என்பதை உறுதி செய்த காஞ்சிபுரம் வட்டாட்சியர் சந்திரசேகரன், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டாட் சியர் சந்திரசேகரன் கூறியதாவது: போலி முத்திரை தொடர்பாக, சிவகாஞ்சி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், உண்மையான முத்திரை மற்றும் வட்டாட்சியரின் கையொப்பம் ஆகிய வற்றின் நகலை வழங்குமாறு தெரிவித்தனர். இவற்றை போலீஸா ரிடம் வழங்கியுள்ளோம். விரைவில் போலி முத்திரைத் தயாரித்த நபர்கள் பிடிபடுவார்கள். போலி முத்தி ரையை பயன்படுத்தி பெறப்பட்ட சான்றுகளைக் கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.