Published : 24 Oct 2019 02:04 PM
Last Updated : 24 Oct 2019 02:04 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி

விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர்.

விக்கிரவாண்டியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 633 ஆண், 95 ஆயிரத்து 22 பெண், 3-ம் பாலினத்தவர் 4 பேர் உட்பட 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு முடிந்ததும், விக்கிரவாண்டி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான இ.எஸ். பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.

வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண 2 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 5,312 வாக்குகளுடன் முன்னிலை வகித்தார். திமுக வேட்பாளர் புகழேந்தி 3,265 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 102 வாக்குகள் பெற்றார்.

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 11,382 வாக்குகளுடன் முன்னிலை வகித்தார். திமுக வேட்பாளர் புகழேந்தி 6,938 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 102 வாக்குகள் பெற்றார்.

மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 16,046 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 10,035 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 336 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 6,011 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 21,298 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 13,307 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 336 வாக்குகள் பெற்றார்.

ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 27,318 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 16,963 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 696 வாக்குகள் பெற்றார்.

ஆறாம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 33,401 வாக்குகளையும், திமுக வேட்பாளர் புகழேந்தி 20,529 வாக்குகளையும் பெற்றனர். 12,872 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

ஏழாம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 39,654 வாக்குகளையும் திமுக வேட்பாளர் புகழேந்தி 24,454 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் 15,200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

எட்டாம் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் 44,960 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 28,254 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேப்டாளர் 16,706 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

ஒன்பதாம் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் 51,786 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 31,859 வாக்குகளையும் பெற்றனர். 19,927 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

10-வது சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளர் 58,153 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 35,618 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்தச் சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளர் 22,535 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

11 ஆம் சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 25,121 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகித்தார்.

12 ஆம் சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளர் 69,808 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 42,835 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 26,973 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் தொடர்ந்தார்.

13 ஆம் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் 75,867 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 46,283 வாக்குகளையும் பெற்றனர். இச்சுற்றின் முடிவில், 29,584 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார்.

14 ஆம் சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளர் 81,439 வாக்குகளும், திமுக வேட்பாளர் 48,977 வாக்குகளும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் 32,462 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

15 ஆவது சுற்றில், அதிமுக வேட்பாளர் 88,003 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 52,393 வாக்குகளையும் பெற்றனர். 35,610 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் தொடர்ந்தார்.

16-வது சுற்றின் முடிவில், 92,955 வாக்குகளையும், திமுக வேட்பாளர் 55,301 வாக்குகளும் பெற்றனர். 37,654 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் வகித்தார்.

17-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 39,045 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

18-வது சுற்றின் முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 40,540 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

19-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

20-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13,407 வாக்குகளும், திமுக வேட்பாளர் 68,632 வாக்குகளும் பெற்றனர். இந்த சுற்றின் முடிவில், 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x