

நாங்குநேரி
நாங்குநேரி இடைத்தேர்தலில் 10-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 15,464வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அக்.21-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் களம் கண்டனர்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 22 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. இதுவரை 10 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திடீரென காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சுமார் 1500 வாக்குகளில் முன்னிலை வகித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் 10-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 47,654 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 32,190வாக்குகள் பெற்றுள்ளார். 15,464 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து தொண்டர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.