

நாங்குநேரி
நாங்குநேரி இடைத்தேர்தல் 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
5-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர், வெ.நாராயணன் 24,288 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 15,525 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் 8,763 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் மொத்தம் 22 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேசைகள் போடப்பட்டுள்ளன.
தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அக்.21-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் களம் கண்டனர்.