Published : 24 Oct 2019 10:12 AM
Last Updated : 24 Oct 2019 10:12 AM

604 போலீஸாருக்கு பதக்கங்கள்: சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

டிஜிபி திரிபாதி, கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் உட்பட சிறப்பாக பணிபுரிந்த 604 போலீஸாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் உட்பட பல் வேறு பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங் கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

சென்னை ஆயுதப்படை கூடு தல் டிஜிபி ஷங்கர் ஜிவால், கோவை காவலர் பயிற்சிப் பள்ளி உதவி ஆய்வாளர் கே.சபரிநாதன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் தகை சால் பணிக்கான காவல் பதக்கமும், தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தக்க பணிக்கான பதக்கமும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான முத லமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி (நிர்வாகப் பிரிவு) ப.கந்தசாமி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆர்.தின கரன், சென்னை மனநல காப் பக காவல் நிலைய தலைமைக் காவலர் சா.டெய்சி ஆகியோர் உட்பட 16 பேர், முதல்வரின் பதக்கத்தைப் பெற்றனர்.

காஞ்சிபுரத்தில் நடந்த அத்தி வரதர் வைபவத்தின்போது பாதுகாப்புப் பணியில் சிறப் பாக செயல்பட்டதற்காக டிஜிபி ஜே.கே.திரிபாதி, வடக்கு மண் டல ஐஜி வரதராஜு உள்ளிட் டோருக்கு சிறப்புப் பதக்கங் கள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த விழாவில் மொத்தம் 604 போலீஸாருக்கு பதக்கங் களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

தமிழக காவல் துறை யினரின் சிறப்பான செயல் பாடுகளால், மாநிலம் முழுவ தும் குற்ற நிகழ்வுகள் கணிச மாக குறைந்துள்ளன.

மாமல்லபுரத்தில் இரு பெரும் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுக்கு சிறப்பான முறையில் பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டன. இதற்காக நமது காவல் துறையினரை பிரதமரும், சீன அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.

பொது இடங்களில் குற்றங் கள் நடப்பதைத் தடுப்பதற்கு சென்னை மாநகரத்தில் மட்டும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 789 கண்காணிப்பு கேமராக்களும், மற்ற மாவட்டங்களில் 1 லட் சத்து 79 ஆயிரத்து 949 கண் காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளால், தீவிரவாத இயக் கங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோதச் செயல்கள் பெரு மளவு தடுக்கப்பட்டுள்ளன. அத்திவரதர் வைபவத்தின் போது சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். தமிழகத்தில் 8,427 இரண்டாம் நிலை காவலர் களின் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x