காலை 6 - 7, இரவு 7- 8 மணி வரை பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி

காலை 6 - 7, இரவு 7- 8 மணி வரை பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி
Updated on
1 min read

சென்னை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டாசு வெடிப்பதால் நம்மைச் சுற்றி உள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப் படியான ஒலி மற்றும் மாசினால் சிறு குழந்தைகள், முதியோர் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

தொழிலாளர்களின் நலனையும், நமது கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக, தமிழக அரசு இவ்வழக்கில் தன்னையும் ஒரு எதிர் வாதியாக இணைத்துக்கொண் டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக். 23-ல் வெளியிட்ட உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத் தில் பசுமை பட்டாசு உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண் டும் எனவும் நிபந்தனைகள் விதிக் கப்பட்டன

மேலும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், பட்டாசுகளை வெடிப் பதால் காற்றின் தரம் பாதிக்கப் படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப் பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அரசு கடந்த ஆண்டு தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் காலை 6 முதல், 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாடும் வகையில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் ஒன்றுகூடி வெடிப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள நலச்சங்கங்கள் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக் கக்கூடிய சர வெடிகளை தவிர்க்கலாம்.

மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in