Published : 24 Oct 2019 09:32 AM
Last Updated : 24 Oct 2019 09:32 AM

கீழடியில் நடைபெற்ற 5-ம் கட்ட அகழாய்வில் வடிகால் அமைப்புகளுக்கான சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு: தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

கீழடியில் நடைபெற்ற 5-ம் கட்ட அகழ்வாய்வில் வடிகால் அமைப்புகளுக்குப் பயன் படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறிய தாவது:

கீழடி அகழாய்வின்போது ஒரு குழியில் 47 செ.மீ. ஆழத் தில் சிவப்பு வண்ணத்தில் 2 சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து பொருத்திய நிலையில் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு குழாயும் தலா 60 செ.மீ நீளமும், 20 செ.மீ விட்ட மும் கொண்டுள்ளன. இந்த குழாய்கள் இணைக்கப் பட்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது தண்ணீர் செல்வதற்கான வடிகால் அமைப்பாக அவை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்தபோது சில கூரை ஓடுகள் கிடைத்தன. அதன்பின் செங்கல் கட்டுமானம் வெளிப்பட் டது. ஆய்வின் இறுதியில் சுருள் வடிவ சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான 2 குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. இந்த குழாய்களின் வடிவம் மற்றும் அளவுகள் வேறுபட்டுள்ளன.

பீப்பாய் வடிவ குழாயின் நுழைவுப் பகுதியில் வடிகட்டி பொருத்தப்பட்டுள்ளது. இவை நீரை வடிகட்டப் பயன் படுத்தியிருக்கலாம். அதாவது இந்த குழாய் மூலம் 2 அடுக்கு கொண்ட பானையில் நீரை சேமித்து இருக்க வேண்டும். மேலும், அகழாய்வில் கண் டறியப்பட்ட செங்கல் கட்டு மானம் 11 அடுக்குகளுடன் 5.8 மீட் டர் நீளமும், 1.6 மீ அகலமும் கொண்டுள்ளது.

இந்த செங்கல் தளத்தில் கூரை ஓடுகள் பாவப்பட்டு அவை திறந்தநிலை வடிகால் அமைப் பாக காணப்படுகிறது. ஏற் கெனவே 2-ம் கட்ட ஆய்வின் போது வெளிப்பட்ட செங்கல் கட்டுமான வடிகால் அமைப்பு மற்றும் தொட்டியின் தொடர்ச் சியானது தற்போது தென் பகுதியில் கண்டறியப்பட்டுள் ளது. அடுத்தகட்ட ஆய்வில் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

இதுவரை மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகளில் காணப்பட்ட வடிகால் அமைப்பில் முழு வதும் மாறுபட்ட நிலையில் இவை இருக்கின்றன. இத் தகைய சான்றுகள் வைகைக் கரையில் சிறப்பான நகர நாகரி கம் இருந்ததை உறுதிபடுத்து கின்றன. ஒரு நகர நாகரிகத் துக்குத் தேவையான பெரும் பாலான கூறுகள் கீழடியில் கிடைத்துள்ளன. இதன் மூலம் பழங்கால மக்கள் நீர் மேலாண்மையில் தொழில்நுட் பங்களைப் பயன்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x