

சென்னை
தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அஞ்சல் துறை மூலம் கடிதம், பார்சல்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியது: இந்திய அஞ்சல் துறை மூலம் வெளிநாடு களுக்கு கடிதங்கள், பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. தனியார் நிறு வனங்களுடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப அஞ்சல் துறையில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், வெளிநாடுகளுக்கு கடிதம், பார்சல் அனுப்ப அஞ்சல் துறையை பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். குறிப் பாக, சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகளை அதிக அளவில் அனுப்புகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந் தஸ்தை மத்திய அரசு அண்மை யில் ரத்து செய்ததன் காரணமாக, இந்தியாவில் இருந்து வரும் அஞ் சல் சேவைகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு எந்த பார்சல் களையும், கடிதங்களையும் அனுப்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் பாகிஸ்தானுக்கு கடிதங்கள், பார்சல்களை அனுப்ப புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்.