திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத் துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. இதற்காக பிரதமர் நரேந் திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை ரூ.24,375 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக் கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழகம் சார்பில் கோரப்பட்டது.

இதற்காக கடந்த மாதம் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் செயலாளர் ப்ரீதா சுதான் ஆகியோரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, நடை பெற்ற சுகாதாரத் துறை அதிகாரி கள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக் கைகளை பரிசீலனை செய்த மத்திய அரசு, நாடுமுழுவதும் அமைய வுள்ள 31 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் 6 கல்லூரிகளை அமைக்க முடிவு செய்தது.

மேலும், இதற்கான அனுமதிக் கடிதத்தை தமிழக சுகாதாரத் துறைக்கு நேற்று மத்திய சுகாதாரத் துறை அனுப்பியது. இந்த கல்லூரி கள் தலா ரூ.325 கோடி மதிப்பீட் டில் அமைய உள்ளன. இதில், 60 சத வீதத் தொகையான ரூ.195 கோடியை மத்திய அரசும் மீத முள்ள 40 சதவீதத் தொகையான ரூ.130 கோடியை மாநில அரசும் ஏற்கவுள்ளது.

தமிழகத்தில் தற்போது 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,500-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. புதிதாக அமை யவுள்ள கல்லூரிகளில் தலா 150 இடங்கள் கிடைக்கவுள்ளன. இதன்மூலம், அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு முதல்கட்டமாக அறிவித்த 58 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 39 கல்லூரிகள் ஏற் கெனவே செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மீதமுள்ள 19 கல்லூரி கள் அடுத்த ஆண்டு திறக்கப் படவுள்ளன. அடுத்தகட்டமாக அறிவிக்கப்பட்ட 24 கல்லூரிகளில் 18 கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் ஒரு கல்லூரி கூட தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அறிவிப்பில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். ஏற்கெனவே தமிழகத்தில்தான் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. புதிய கல்லூரிகளால் கிடைக்கும் 900 எம்பிபிஎஸ் இடங்கள் மூலம் மருத்துவப் படிப்பில் தமிழகம் சிறந்து விளங்கும்.

இவைதவிர திருவள்ளூர், நாகப் பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

பிரதமருக்கு நன்றி

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரி வித்து வெளியிட்ட அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக் கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும் நிதியுதவியும் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதற்கான முன்மொழிவுகள் குறு கிய காலத்தில் தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மத்திய அரசு கோரியபடி மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க உடனடியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விரைவான நடவ டிக்கை மேற்கொண்டு, உடனடி யாக புதிய மருத்துவக் கல்லூரி களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையினை ஏற்று 6 கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வு. இதற்கென ரூ.1,950 கோடி மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கி, அதில் ரூ.1,170 கோடி வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ.780 கோடி வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்தச் சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், காஞ்சிபுரம், கட லூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 12 இடங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in