Published : 24 Oct 2019 08:09 AM
Last Updated : 24 Oct 2019 08:09 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டியில் 84.41 சதவீதமும், நாங்குநேரியில் 66.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரு தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இ.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத்தொடர்ந் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மின்னணு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப் பட்டாலும், தபால் வாக்கு முடிவுகள் தெரிந்த பின்னரே, முதல் சுற்று மின்னணு இயந்திர வாக்கு முடிவுகள் வெளியிடப்படும். தபால் வாக்குகள் தனி அறையில் எண்ணப்படும்.

மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண 2 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தலா 22 சுற்றுகளாக வாக்கு கள் எண்ணப்படுகின்றன. அனைத்து மேசைகளிலும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர், ஒவ்வொரு மேசைக்கும் மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு மேசையிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இரு தொகுதிகளிலும் தலா 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில், அரசி யல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் உள்ள விவிபாட் இயந்திர வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டு, மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x