

புழல் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 250 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சி, எஸ்டிபிஐ, ஆதி தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகள் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் புழல் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சுமார் 250 பேரை புழல் போலீஸார் கைது செய்து அருகே இருந்த மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.