

புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூரில் 19 கிலோ நகை திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டோர் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, நகைகளைப் பறிமுதல் செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குளத்தூர் சிட்டி யூனியன் வங்கி யில் கடந்த ஆண்டு நவ. 30-ம் தேதி இரவு 19 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கில், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மு.கோபால கிருஷ்ணனை(30) கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி அவரது சகோதரர் அழகர்சாமி, நகை விற் பனையாளர் ஆனந்தகுமார்(40) ஆகியோரை போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், கோபாலகிருஷ்ணன், ஆனந்தகுமார் இருவரும் கூட்டுசேர்ந்து நகைகளை அடகு வைத்ததும், உருக்கி விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, விற்பனை செய்யப் பட்ட மற்றும் அடகு வைத்த கடை களுக்குச் சென்று நகைகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் பல்வேறு குழுவாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், நகைகளை வாங்கிய சில கடைகள், பாதுகாப்பு நலன்கருதி அந்த நகைகளை அவர்களின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதால் அந்த நகைகளை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாக் கூறப்படுகிறது.