

தீபாவளிக்கு மறுநாள் திங்கள்கிழமை (அக்.28) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் நடக்கஇருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர்எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தீபாவளி பண்டிகை வரும் 27-ம்தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மருத்துவம்சார் அறிவியல் படிப்பு மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடக்க இருந்தன. நவ.4, 9-ல் நடக்கிறதுஇந்நிலையில், அன்றைய தினம் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால், அன்று நடக்க இருந்த மருத்துவம்சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ம் தேதிக்கும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.