Published : 23 Oct 2019 08:56 AM
Last Updated : 23 Oct 2019 08:56 AM

பருவமழை காலத்தில் மின் தடை; புகார் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை

மழைக் காலத்தின்போது மின்தடை உள்ளிட்ட புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பி.தங்கமணி சென்னையில் நேற்று ஆய்வு நடத்தினார். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினித், மேலாண்மை இயக்குநர் மற்றும் இயக்குநர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மின்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பருவமழையின் போது மின்வாரியம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கினார். மழை நேரத்தில் மின்தடை பற்றிய புகார்கள், நுகர்வோரின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும். மின் விபத்து ஏற்படா வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

மக்கள் மின்தடை குறித்த புகார்களை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 1912 என்ற எண்ணுடன், மின்வாரிய தலைவர்புகார் மைய எண்களான 044 - 28524422, 28521109 மற்றும் வாட்ஸ்அப் எண்ணான 94458 50811, மின்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 044 - 24959525 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் தெரிவித்துள்ளதாக மின்வாரிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x