

புதுச்சேரி
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அக்டோபர் 28-ம் தேதி, திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இன்று (அக்.22) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வருவதற்காக தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அக்டோபர் 28-ம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி பணி நாளாக இருக்கும்" என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனிடையே போனஸாக புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சி மற்றும் பி குரூப் பிரிவு ஊழியர்களுக்கு ரூ.6,908-ம், தினக்கூலி ஊழியர்களுக்கு 1,184-ம் வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செ.ஞானபிரகாஷ்