தாம்பரம் குப்பை கிடங்கில் தீ: கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

தாம்பரம் குப்பை கிடங்கில் தீ: கட்டுப்படுத்தும் பணி தீவிரம்
Updated on
1 min read

சென்னை தாம்பரம் நகராட் சியில் 39 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப் படும் அனைத்து குப்பைகளும் தாம்பரம் கன்னடபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இங்கு கடந்த 5-ம் தேதி இரவில் ஒருவரின் சவ ஊர்வலத்தில் போடப்பட்ட சில பட்டாசுகளால் குப்பை கிடங்கில் தீப்பிடித்தது. இந்தத் தீ குப்பைக் கிடங்கு முழுவதும் பரவியது.

இதனால் அப்பகுதி முழு வதும் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. தாம்பரம், கிண்டி, அசோக்நகர், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த இரு நாட்களாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. குப்பை கிடங்கைச் சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு புகை பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற வற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பின்னரே தீ மற்றும் புகையை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் இறங் கினர். குப்பைகள் பரந்து கிடப் பதால் பரவி எரியும் தீயை கட்டுப்படுத்த குப்பைகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்காக 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பை களை ஒருங் கிணைக்கும் பணி நடந்து வருகிறது.

குப்பை கிடங்கு இடமாற்றம்

அமைச்சர் சின்னையா மற்றும் நகராட்சி அதிகாரிகள் குப்பை கிடங்கை நேரில் சென்று பார்த்து ஆய்வு நடத்தினர். இந்நிலையில் கன்னடபாளை யத்தில் இருக்கும் குப்பை கிடங்கை வேங்கடமங்கலத் துக்கு இடமாற்றம் செய்யவும் அறிவியல் முறைப்படி மாற்றிய மைத்து அப்பகுதியை சுற்றுச் சூழல் பாதிக்காத பகுதியாக மாற்றவும் நகராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in