Published : 22 Oct 2019 03:55 PM
Last Updated : 22 Oct 2019 03:55 PM

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்

புதுக்கோட்டை

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (அக்.22) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால்தான் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

"ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்று சொன்னால், நிச்சயமாக நான் மகிழ்ச்சி அடைவேன், பாராட்டு தெரிவிப்பேன். ஆனால், என்னுடைய விருப்பம், ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என விரும்புகிறேன். இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவரை இன்றைக்கு அழைக்கவில்லை.

தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பாஜகவில் சேருங்கள் என்றுதான் சொல்வேன்," என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அப்போது, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கான முயற்சியை பாஜக எடுக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அந்த முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை," என பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x