Published : 22 Oct 2019 10:13 AM
Last Updated : 22 Oct 2019 10:13 AM

வேலைநிறுத்த போராட்டத்தை தடுக்க நடவடிக்கை; அரசு டாக்டர்களுக்கு விடுப்பு தரக்கூடாது: டீன்கள், இயக்குநர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

சென்னை

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வரும் 25-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில், அதைத் தடுக்கும் பொருட்டு இம்மாத இறுதி வரை டாக்டர்கள் யாருக்கும் விடு முறை அளிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவ மனைகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு சுகாதாரத் துறை சுற்றறிக் கையை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “இந்த மாத இறுதி வரை யாருக்கும் விடுப்பு அளிக் கக்கூடாது. முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுப்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக அரசு டாக்டர் களிடம் கேட்டபோது, “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும், எம்சிஐ விதிப்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றவலியுறுத்தி தொடர்ந்து பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததால்தான், கடந்த மாதம் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.

ஆனால், அமைச்சர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. கோரிக் கைகளை ஏற்காவிட்டால் திட்ட மிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x