

சென்னை
மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந் ததைத் தொடர்ந்து நாடுதழு விய அளவில் வங்கிகள் நடத்தும் ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி இன்று நடக்கிறது. இதை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. பொது மக்களிடம் இருந்து ரூ.85 லட்சம் கோடியை வைப்புத் தொகையாக வங்கிகள் திரட்டி யுள்ளன. ரூ.60 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள் ளது. இதில், 40 சதவீதக் கடன் விவசாயம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏழ்மையை அகற் றுதல், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் அடிப் படை கட்டுமான வளர்ச்சி ஆகிய வற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு
இந்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு இணைத்து வருகிறது. மேலும் 10 வங்கிகளை இணைக்கவும் தீர்மானித்துள்ளது. இதற்கு ஊழி யர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த இணைப்பு நடவடிக்கை யால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்த நடவடிக்கையை கைவிட வேண் டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் வாராக்கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதக் கட்டணம் என்ற பெயரில் வாடிக்கை யாளர்களை துன்புறுத்தக் கூடாது மற்றும் சேவைக் கட்ட ணத்தை உயர்த்தக்கூடாது, வைப்புத் தொகைகள் மீதான வட்டியை உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என ஏஐபிஇஏ, பெஃபி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இந்நிலையில், இக்கோரிக் கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அக்.22-ம் தேதி (இன்று) அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்கங் கள் அறிவித்தன. இதையடுத்து பேச்சுவார்த் தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதன்படி, மத்திய அரசு தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த் தையில் நிர்வாகத் தரப்பில் இந்திய வங்கிகள் சங்கத்தினர், மத்திய நிதியமைச்சக அதிகாரி கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தொழிற்சங் கத்தின் கோரிக்கைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இத னால் பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது.
தமிழகத்தில் 40 ஆயிரம் பேர்
இதையடுத்து, இன்று திட்ட மிட்டபடி அகில இந்திய அளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெறும் என அகில ஏஐபிஇஏ அறிவித்தது. இதில், நாடுமுழு வதும் 5 லட்சம் ஊழியர்களும் தமிழகத்தில் 40 ஆயிரம் பேரும் பங்கேற்பார்கள் என்றும் இதனால், வங்கிப் பணி கள் முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்றும் தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.