

சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுப்பதால் மாணவர்களின் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம், ஜெர்மனி மேம்பாட்டு முகமை இணைந்து நடத்தும் பருவநிலை மாற்றத்தால் வன சூழலியலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம், நேற்று கிண்டியில் நடைபெற்றது. இதில், வன அலுவலர்கள், வன உயிரின காப்பாளர்கள் பங்கேற்றனர்.இந்த கருத்தரங்கத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தொடங்கி வைத்து வனத்துறை பாதுகாப்பு குறித்து விரிவாக பேசினார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல் வேறு துறைகளைச் சார்ந்த 450-க் கும் மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளது. திட்டமிட்டபடி, அந்தத் தேர்வுகள் நடைபெறும். சிறு மழைகளுக்கு தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது. கனமழை பெய்யும் நேரத்தில் தேர்வு தள்ளி வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுப்பதால் மாணவர்களின் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது’’ என்றார்.
தமிழ்நாடு வனத்துறைத் தலை வர் பி.துரையரசு கூறியதாவது:
தமிழகத்தில் 20 சதவீதம் வனப்பகுதியாக இருக்கிறது. மீத முள்ள 80% பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின் றன. இந்த வளர்ச்சி பணிகளைத் தடுக்க முடியாது. இருப்பினும், ஓரளவுக்கு குறைக்கலாம். மாசு களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
வனங்களை மேம்படுத்தவும், விவசாயிகள் வைத்திருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ப்பதை அதிகரிக்கவும் நகரப்புறப் பகுதிகளிலும் வாய்ப்புள்ள சாலை மற்றும் பூங்காக்களில் மரங்களை அதிக அளவில் வளர்க்கவும் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலமே சூழலியல் மாற்றத்தை ஓரளவுக்கு கட்டுப் படுத்த முடியும்.
பருவநிலை மாற்றத்தால் வன சூழலியலில் ஏற்படும் தாக்கம் குறித்த இந்தக் கருத்தரங்கத்தில் மாவட்ட வனஅலுவலர்கள், வன உயிரின காப்பாளர்கள் பங்கேற் றுள்ளனர். பருவ மாற்றத்தால் ஏற் படும் வன சூழலியல் வேறுபாடு மற்றும் அதன் தாக்கம் குறித்து இனி விரிவாக விவாதிக்கப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வல்லுநர்கள் இக்கருத் தரங்கில் பங்கேற்று பேசியுள்ளனர்.
சூழலியலில் ஏற்படும் தாக் கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, மேலும், வனப்பகுதியை எவ்வாறு விரிவுப்படுத்துவது, பாதுகாப்பது குறித்து பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்படும்.
மரக்கன்றுகளை வளர்க்கவும், பாதுகாக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தனியார் தொண்டு நிறுவனங்களின் ஆதரவும் அவசி யமாகும். உதகையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தொய் வில்லாமல் நடைபெற்று வரு கிறது. இவ்வாறு கூறினார்.