Published : 22 Oct 2019 09:33 AM
Last Updated : 22 Oct 2019 09:33 AM

குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம்: தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன.

இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரே தேர்வாக அறிவிக்கப்பட் டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு, தற்போது 2 தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர் வின் பகுதி-அ மட்டும் தனித் தாளாக, தகுதித் தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. இது 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாகும். இதில் குறைந்தபட்சம் 25 மதிப் பெண்கள் பெற்றால் மட்டுமே தாள்-2 மதிப்பீடு செய்யப்படும். மற்றபடி, இத்தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தர வரிசை நிர்ணயத்துக்கு கணக்கில் கொள்ளப்படாது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பகுதி-அ தவிர்த்த இதர பகுதிகள் தாள் 2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருந் தால் மட்டுமே முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் க.நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x