Published : 22 Oct 2019 08:46 AM
Last Updated : 22 Oct 2019 08:46 AM

அமெரிக்க - சீன வர்த்தகப் போரை சாதகமாக்கி கொள்ள வாய்ப்பு; செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும்: வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என ஜவுளித் தொழில் துறையினர் தகவல்

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை

அமெரிக்க - சீனா வர்த்தகப் போர் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத் துவதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று ஜவுளித் தொழில் துறையினர் கூறுயுள்ளனர்.

சர்வதேச ஆயத்த ஆடை சந் தையில், மிக முக்கியமாக கருதப் படுவது அமெரிக்க சந்தையாகும். சீனா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தகப் போரால், அங்கு சீனா வின் ஏற்றுமதி ஆதிக்கம் குறைந்து, அந்த வியாபார வாய்ப்பு மற்ற நாடுகளுக்குக் கிடைக்கத் தொடங்கி யுள்ளது.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில் அமெரிக்கா 57,308 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சம் கோடி) இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவைக் கணக்கிட்டால் 5.76 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்க சந்தையில் சீனா 30 சதவீதத்தைக் கைப்பற்றி முதல் இடத்தில் இருந்தாலும், நடப்பு ஆண் டில் வளர்ச்சி வீதம் 1.99 சதவீதம் மட்டுமே. இதே காலகட்டத்தில் 16 சதவீத சந்தையை கைப்பற்றியுள்ள வியட்நாம், இரண்டாவது இடத் தில் இருந்தாலும், 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மூன்றா வது இடத்தில் இருக்கும் வங்க தேசம் 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா 5 சதவீத சந்தை மதிப்பைக் கைப்பற்றி, 8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், ஆயத்த ஆடை துறை முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி யடைந்தால், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் வியட்நாம் ரூ.7 ஆயிரம் கோடியும், வங்கதேசம் ரூ.3,100 கோடியும் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளன. ஆனால், இந்தியா ரூ.1,500 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து, வளர்ச்சியில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்க சந்தையில் பருத்தி சார்ந்த ஆயத்த ஆடைகளும், செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடைகளும் ஏறத்தாழ சம அளவுக்கு இறக்குமதி செய்யப்படு கின்றன. பருத்தி சார்ந்த ஆயத்த ஆடை வளர்ச்சியில் 10.58 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியிருந் தாலும், செயற்கை பஞ்சு கலந்த ஆடைகள் ஏற்றுமதியில் பின்தங் கியே உள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரின் முழு பலனையும் இந்தியா பெற வேண்டுமெனில், செயற்கை பஞ்சு கலந்த ஆடை ஏற்றுமதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது: அதிக அளவிலான திருப்பூர் நிறுவனங்கள் ஐரோப்பிய ஆயத்த ஆடை சந் தையையே சார்ந்துள்ளன. இந்த வர்த்தக போரை முறையாக பயன்படுத்த ,அமெரிக்க வர்த்தகத் திலும் கவனம் செலுத்த வேண்டி யது அவசியமாகும்.

செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா வின் சந்தையில் இந்தியா 2.7 சதவீதம் மட்டுமே பங்கு வகிக் கிறது. கடந்த 8 மாதங்களில் வளர்ச்சி இந்த ஆடை வகைகளில் இல்லை. ஏறத்தாழ 27,485 மில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை பஞ்சு ஆடைகளில், அமெரிக்க இறக்குமதி சந்தையில், இந்தியாவின் பங்கு 755 மில்லியன் டாலர் மட்டும்தான். ஒட்டுமொத்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி பெரிதும் வளராமல் போனதற்கு இது முக்கியக் காரணமாகும். எனவே, செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கூடு தல் கவனம் அவசியம். இது சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி வரி வீதங் களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

செயற்கை பஞ்சு மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான இறக்கு மதி வரி வீதத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். தேசிய அள வில் செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடைத் தயாரிப்பை வளர்த் தெடுப்பதற்கான வழிகாட்டுதல் குழுவை அமைத்து, போட்டித் திறனை வளர்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகள், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியை மேம்படுத்தும். ரூ.7 ஆயிரம் கோடி ஏற்றுமதி அதிகரித்தால், ஏறத்தாழ 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை இந்த துறையில் உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x