Published : 21 Oct 2019 05:40 PM
Last Updated : 21 Oct 2019 05:40 PM

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்: மாலை 5 மணி நிலவரம்; 66.95% வாக்குகள் பதிவு

புதுச்சேரி

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு இன்று (அக்.21) நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 32 வாக்குச்சாவடிகளிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,009. 17,047 ஆண் வாக்காளர்களும், 17,961 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரம் இத்தொகுதியில் அமைந்துள்ள 32 வாக்குச்சாவடிகளிலும் உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 158 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 5 மணி நிலவரப்படி 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x