Published : 27 Jul 2015 09:42 AM
Last Updated : 27 Jul 2015 09:42 AM

கரூர் வைஸ்யா வங்கி நிறுவனர் தின விழா, நூற்றாண்டு தொடக்க விழா

கரூர் வைஸ்யா வங்கியின் நிறுவனர் தின விழா மற்றும் வங்கியின் நூற்றாண்டு தொடக்க விழா கரூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

வங்கி நிறுவனர்கள் எம்.ஏ.வெங் கட்ராம செட்டியார், ஆதிகிருஷ்ண செட்டியார் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. வங்கித் தலைவர் கே.பி.குமார் வரவேற் றார். ஜிஎம்ஆர் குரூப் நிறுவ னங்களின் தலைவர் ஜி.எம்.ராவ், வங்கியின் நூற்றாண்டு லோ கோவை வெளியிட்டுப் பேசினார்.

வங்கியின் முதன்மை செயல் அலுவலர் கே.வெங்கட்ராமன், வங்கியின் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் தலை, கேவிபி ப்ரீபெய்டு கார்டு, கேவிபி சென்டினரி கேஷ் சர்டிபிகேட், ஏடிஎம் அட்டையாகவும், பயோ மெட்ரிக் மைக்ரோ ஏடிஎம் கார்டாகவும் பயன்படுத்தக்கூடிய ஆதார் எனேபிள் ரூபே கார்டு, கேவிபி இ-புக், கேவிபி ரூபே கிஷன் கார்டு, பிர்லா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்த கேவிபி பிர்லா லைஃப் இன்சூரன்ஸ், கேவிபி மித்ரா ஹெல்த் கார்டு ஆகியவற்றை வெளியிட்டுப் பேசினார்.

சிறந்த வங்கிக் கிளை, நடுத்தர வங்கிக் கிளை, புதிய வங்கிக் கிளை, ஊரக புறக் கிளைகள் தேர்வு செய்யப்பட்டு, கிளை மேலாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வங்கி குறித்து இயக்குநர் ஏ.ஜெ.சூரியநாராயணன் விளக்கினார்.

நிகழ்ச்சியில், வங்கி இயக்கு நர்கள் எம்.கே.வெங்கடேசன், ஜி.ராஜசேகரன், கே.கே.பாலு, என்.எஸ்.ஸ்ரீநாத், பி.சுவாமிநாதன், வி.ஜி.மோகன்ப்ரசாத், ஏ.கே.பிரபுராஜ், கே.எல்.விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, வங்கி தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் 100 பேர் ரத்ததானம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x