

சென்னை
சென்னை நெற்குன்றம், மூகாம் பிகை நகரைச் சேர்ந்தவர் வசந்த கிருஷ்ணன். இவரது மனைவி திவ்யா (30). இவர்களுக்கு 9 வய தில் மகனும் உள்ளார். திவ்யா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நிர்வாக பிரிவில் பணி செய்து வந்துள்ளார். வசந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த திவ்யா நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகனுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, அதே விஷத்தை தானும் குடித்து மயங்கியுள்ளார்.
அவரது அண்ணன் தினேஷ் வீட்டில் திவ்யா மயங்கி கிடப்பதை கண்டு இரு வரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திவ்யா உயிரிழந்துள்ளார். சிறுவனுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.