

சென்னை
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலா னவர்கள் அசைவம் சாப்பிடு வதில்லை. இந்நிலையில் புரட்டாசி மாதம் நிறைவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் விற்பனை சந்தைகளிலும் இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் காசிமேடு, சிந் தாதிரிபேட்டை, வானகரம் உட்பட பல்வேறு இடங்களில் மீன் விற் பனை சந்தைகள் இயங்கி வருகின் றன. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அதிக மாக காணப்படும். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் மீன், இறைச்சிகளை சிலர் உண்ண மாட்டார்கள். இதனால், கடந்த மாதம் 18-ம் தேதி முதல் கடந்த 17-ம் தேதி வரை ஒரு மாதம் மீன் விற்பனை சந்தைகள், இறைச்சி கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை யான நேற்று காசிமேடு மீன் விற்பனை சந்தைக்கு அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் வரத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இத னால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இங்கு வழக்கமாக 150 டன் முதல் 180 டன் வரை மீன்கள் கடலில் இருந்து பிடித்து வரப்படும். ஆனால், நேற்று 120 டன் வரையிலான மீன்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டது. வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை ரூ.30 முதல் ரூ.70 வரை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. விலை சற்று அதிக மாக இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
இதேபோல் சிந்தாதிரிபேட்டை, வானகரம் உட்பட சென்னை மாநக ரம் முழுவதும் இயங்கி வரும் மீன் விற்பனை சந்தைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர கோழி, ஆட்டுக்கறி விற் பனையும் மும்முரமாக நடந்தது. அனைத்து இறைச்சிக் கடைகளி லும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.