Published : 21 Oct 2019 07:08 AM
Last Updated : 21 Oct 2019 07:08 AM

மழைப் பொழிவு, பணப்புழக்கம் குறைவு, ஆன்-லைன் வர்த்தகம் இருந்தாலும் தி.நகர், வண்ணாரப்பேட்டையில் உற்சாகம் குறையாத ‘தீபாவளி ஷாப்பிங்’: மக்களைக் கவரும் சலுகைகள், பரிசுப் பொருட்கள்

சென்னை

மழைப்பொழிவு, பணப்புழக்கம் குறைவு இருந்தாலும் நேற்று விடுமுறை என்பதால் தி.நகரில், குறிப்பாக ரங்கநாதன் தெருவில் மக்கள் உற்சாகத்துடன் ‘தீபாவளி ஷாப்பிங்’ செய்தனர்.

இந்த ஆண்டு தீபாவளி, வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றதும் புத்தாடை, இனிப்பு, பட்டாசுதான் நினைவுக்கு வரும். இந்த வரிசையில் இப்போது புதிய ரக செல்போன்கள், தங்க நகைகள், வீட்டு உபயோகப் பொருட்களும் சேர்ந்துள்ளன.

வழக்கமாக தீபாவளிக்கு ஒருவாரத்துக்கு முன்பும், குறிப்பாக தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதும். கடைசி நேரத்தில் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களில் குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமை களில் புத்தாடைகள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டு கின்றனர்.

சென்னையில் நேற்று காலை மழை பொழிந்தாலும்கூட, தி.நகரில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டியது. பிரபல ஜவுளிக் கடைகளில் வழக் கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந் தது. பிரபல ஜவுளிக் கடைகள் மட்டு மல்லாமல், சாலையோர ஜவுளிக் கடைகளிலும் கூட்டம் அலை மோதியது.

இதுகுறித்து ஐயப்பன்தாங் கலைச் சேர்ந்த திலகர் என்பவர் கூறும்போது, “அடுத்த வாரம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே தீபாவளி ஷாப்பிங் வந்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது. ஜவுளி எடுத்துவிட்டு வெளியில் வருவதற்கு 50 நிமிடங்கள் வரை ஆகிவிட்டது.

மாதக் கடைசி என்பதால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தீபாவளி கொள்முதல் செய்தோம். தீபாவளி முக்கியமான பண்டிகை என்பதால் செலவைத் தவிர்க்க முடியவில்லை. இனிப்பையும், பட்டாசையும்கூட கடைசி நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம். புத்தா டையை அவ்வாறு வாங்க முடியாது என்பதால் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வந்தோம்” என்றார்.

சாலையோர வியாபாரி முருகேசன் கூறும்போது, “தீபா வளிக்கு முன்பு ஒரு வாரம் மட்டுமே வியாபாரம் சூடுபிடிக்கும். இந்த ஆண்டு மழையால் வியாபாரம் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. கடனுக்கு துணிகளைக் கொள்முதல் செய்து விற்கிறேன்.

மழைப்பொழிவு இல்லாத சமயத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். விலை சற்று அதிகமாக இருப்பதால் மக்கள் தயக்கம் காட்டினாலும் திருப்பூர், பெங்களூரு துணிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார்.

பிரபல ஜவுளிக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மக்களிடம் பணப்புழக்கம் குறை வாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் விலை உயர்ந்த ஆடைகளைவிட, விலை குறை வான ஆடைகளை விரும்பி எடுக் கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரேயொரு ஆயத்த ஆடை எடுப்பதைக் காண முடிகிறது.

மேலும், ஆன்-லைனில் ஆடை கள் வாங்குவதில் இளம் தலை முறையினர் ஆர்வம் காட்டுவதால், பிரபல கடைகளுக்குக்கூட சற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மை தான். இருந்தாலும், கடைக்கு நேரில் வந்து துணியின் தரத்தையும், வண்ணத்தையும் பார்த்து வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் எங்கள் கடைக்கு வரத் தவறுவதே இல்லை" என்றார்.

தி.நகருக்கு வரும் செல்வந்தர் கள், நடுத்தர மக்கள் புத்தாடை களுடன், நகைக் கடைகளுக்கும் சென்று தங்க நகைகள் வாங்கு கின்றனர்.

பிராண்டட் ஜவுளிகள் விற்பனை யில் போட்டா போட்டி நிலவுகிறது. ‘ஒன்று வாங்கினால் ஒன்று இல வசம்’ போன்ற சலுகைகள், ஸ்கூட்டி போன்ற பரிசுப் பொருட்கள் மக்களை வெகுவாகக் கவர்கின்றன.

‘பின் முதல் பிளேன் வரை’ என அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் இடம் என்று கூறப்படும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் வழக்கத்தைவிட நேற்று கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

வண்ணாரப்பேட்டையில்..

வடசென்னையின் முக்கிய வியாபார தலமாக விளங்கும் வண்ணாரப்பேட்டையில் நேற்று கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ஏராளமானோர் குவிந்தனர். கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

அதனால் வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் வாகன போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட் டிருந்தது. கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீஸாரும் குவிக்கப் பட்டிருந்தனர். பெண்கள் அணிந் திருக்கும் நகைகள், கைப்பைகள், மணிபர்ஸுகள் மற்றும் குழந்தை களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கவனத்தை திசைத் திருப்பும் நபர்களிடம் ஜாக்கிரதை யுடன் இருக்கவும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து போலீஸார் அறி வுறுத்தினர். மேலும், அங்கு கண் காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்ததால், வண் ணாரப்பேட்டை கல்லறை சாலை யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையம் அப்பகுதியில் இருப்பதால் அங்கு வரும் குடிநீர் லாரிகளின் போக்குவரத்தும் பாதிக் கப்பட்டது. நேரத்தோடு குடிநீரை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. சாலை யில் ஆங்காங்கே மழைநீர் தேங்கிய தால், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் போக்கு வரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. துணிக்கடைகளைப் போல அப் பகுதிகளில் உள்ள உணவகங்களி லும் கூட்டம் அலைமோதியது.

இதேபோன்று புரசைவாக்கம் பகுதியில் புரசைவாக்கம் நெடுஞ் சாலை மற்றும் டவுட்டன் பகுதியில் உள்ள பல துணிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தாம்பரத்தில்..

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது, தாம்பரம், குரோம்பேட்டை பகுதியைச் சுற்றி யுள்ள கிராம மக்களின் வருகை யால், ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலை யில், இந்த ஆண்டு வியாபாரம் மந்தமாக உள்ளதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பிரபாகரன் என்ற வியாபாரி கூறும்போது, “இந்த ஆண்டு தீபாவளி மாதக் கடைசியில் வருகிறது. அதனால் வியாபாரம் இல்லை. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, ரூ.20 கோடிக்கு மேல் துணிகள் விற்பனை யானது. ஆனால், இந்த ஆண்டு இது வரை, 40 லட்சம் ரூபாய் அளவுக் குத்தான் விற்பனையாகியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x