

சென்னை
மாமல்லபுரத்தை பார்வையிட குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கட் டணம் வசூல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்குகிறது. இந்திய பிரதமர், சீன அதிபர் மாமல்ல புரத்தில் சந்தித்த பிறகு மேலும் பிரபலமாகிவிட்டது.
இந்நிலையில் இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றைப் பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் புராதன சின்னங் களைப் பார்வையிட வரும் உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம்கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது.
மேலும், வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்வை யிட உள்ளூர் சுற்றுலா பயணிகளி டம் ரூ.40-ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ரூ.600-ம் வசூலிக்க மத்திய தொல்லியல் துறை முடிவெடுத்து அமல்படுத்தியிருப் பதை திரும்பப் பெற வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களுக்கு நுழைவுக் கட்டணம் என்பது மாமல்லபுரத்தை பார்த்துப் பயன்பெறக்கூடிய வகையில் இருக் காது. தமிழரின் பெருமையை, வரலாற்றை, தொன்மையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாமல்ல புரத்தை பார்வையிட குறைந்த பட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவர் களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யாமல் இருப்பது நல்லது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.