

இ.மணிகண்டன்
சிவகாசி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்கள், சிறுவர்களைக் கவரும் வகையில் சிவகாசியில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு, டிக் டாக், பாகுபலி உட்பட ஏராள மான பட்டாசுகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் உள்ள பட் டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி விறுவிறுப் படைந்துள்ளது. வாடிக்கையாளர் கள், பட்டாசு பிரியர்களைக் கவரும் வகையில் சிவகாசியில் ஆண்டுதோறும் புதுப்புது பட்டாசு ரகங்கள் உற்பத்தி செய்வது வழக்கம்.
வீடியோ கேம் பெயர்கள்
இந்த ஆண்டு தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் ஜல்லிக்கட்டு பெயரில் வந்துள்ள பட்டாசுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதோடு, சிறுவர்களைக் கவரும் வகையில் வீடியோ கேம் பெயர்களைக் கொண்ட டெம் பிள் ரன், கிளாஸ் ஆஃப்-கிளான்ஸ், ஆங்ரி பேர்டு பெயரில் பட்டாசு களும், சமூக வலைதளங்களான ட்விட்டர், ஸ்கைப், டிக்-டாக், பப்பு ஆகிய பெயர்களில் பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐஸ்ஏஜ், ஹல்க், ஒன்டர்பார்க், கும்கி, பாகுபலி, தண்டர், போகோ, குர்குரே, பிங்கோ ஆகிய பிரபல திரைப்படங்களின் பெயர்களைக் கொண்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு வகைகள் இந்த ஆண்டு புது வரவாக உள்ளன. ஒரே கம்பி மத்தாப்பில் 3 மற்றும் 4 வண்ணங்களை உமிழும் வகை யில் புது வரவாக டிரை கலர், மல்டி கலர் கம்பி மத்தாப்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
இதுகுறித்து பட்டாசு விற்பனை யாளர் குமார் கூறியதாவது:
பட்டாசு வெடிப்பதில் சிறுவர் களே அதிக ஆர்வம் காட்டுவர். அவர்களைக் கவரும் வகையிலான பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்களே அதிகம் விற்பனையாகும். வழக்க மான பட்டாசு ரகங்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ஆண்டு புதிய ரக மத்தாப்பு, பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதுபோன்ற மத்தாப்பு மற் றும் பட்டாசு ரகங்களுக்கு சிறு வர்களிடம் நல்ல வரவேற்பு உள் ளது என்றார்.ஐஸ்ஏஜ், ஹல்க், ஒன்டர்பார்க், கும்கி, தண்டர், போகோ, குர்குரே, பிங்கோ ஆகிய திரைப்படங்களின் பெயர்களைக் கொண்ட பட்டாசு வகைகள் இந்த ஆண்டு புதுவரவாக உள்ளன.