தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கிரண்பேடி உத்தரவு

தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கிரண்பேடி உத்தரவு
Updated on
1 min read

தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க புதுச்சேரி டிஜிபியிடம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பஉத்தரவிட்டுள்ளார்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி போட்டியிடும் கட்சிகள் நேற்று இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் முதல்வர் நாராயணசாமி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் அனைத்தும் ஊடகங்களில் வெளியானது. இதனை வைத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது தொடர்பாக மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க புதுச்சேரி காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவாவிற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

செ. ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in