கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி
Updated on
1 min read

சென்னை

முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது.

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏசிஎஸ் கன்வென்ஷன் மையத்தில் இன்று நடந்தது.

விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது. இதை, ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம், நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் வழங்கினர்.

மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in