

அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க அனுமதிக்கும் முன்பு தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாண்ட்ஸ் தொழி லாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
அகில இந்திய பாண்ட்ஸ் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை பல்லாவரத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடத்தப் பட்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த பாண்ட்ஸ் பவுடர் நிறுவனத்தை கண்டித்து நடந்த இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எம்.ராமன் தலைமை தாங்கினார். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.மோகன்குமார் சிறப்புரை ஆற்றி னார்.
‘இந்தியாவில் அந்நிய முதலீட் டாளர்கள் தொழில் தொடங்க அனுமதிக்கும் முன்பு தொழிலாளர் களின் பணிப் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும். நிறுவனங்களின் சமூகப் பொறுப் புக்கு (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டீஸ்) தொகை நிர்ணயம் செய்வதுபோல், நிறுவன பணியாளர்களுக்கான பொறுப்பு (கார்ப்பரேட் எம்ப்ளாயீஸ் ரெஸ் பான்சிபிலிட்டீஸ்) என்பதை உரு வாக்கி, நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 1 சதவீதம் ஒதுக் குவதை கட்டாயமாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.