

சென்னை
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு வருகிறது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் போலீஸாரின் கண்காணிப்பு வளை யத்துக்குள் கொண்டு வரப்பட் டுள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க முக்கிய கடை வீதிகளில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டத்தில் ஈடுபடலாம் என மாநில உளவுத் துறைக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை தீவிரப் படுத்தும்படி காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தியுள்ளார். அதன்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் தங்களது பகுதியில் பாதுகாப்பை நேரடியாக மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை, ரோந்து பணி, உளவுப் பணியை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டுள்ளன. தமிழக எல்லை களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதோடு பிரதான சாலை களில் தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் முழு அளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை தி.நகர், வண்ணாரப்பேட்டை, பாடி, புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரோந்துப் பணியை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ள னர். இங்கு ட்ரோன் மூலமும் கண் காணிக்கப்படுகிறது. இதுதவிர கண்காணிப்பு கேமரா வளையத் துக்குள் சென்னை முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிஜிபி வேண்டுகோள்
மேலும், ரயில், பேருந்து மற்றும் விமான நிலையங்களிலும், வணிக பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத் தியுள்ளனர். சந்தேகத்துக்கு உரிய நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தகவல் தெரி விக்கும்படி பொதுமக்களை டிஜிபி ஜே.கே.திரிபாதி கேட்டுக் கொண்டுள்ளார்.