Published : 20 Oct 2019 09:51 AM
Last Updated : 20 Oct 2019 09:51 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்.21) நடக்கிறது. இதற் கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

விக்கிரவாண்டி மற்றும் நாங்கு நேரி தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகர ணங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு நாளை (இன்று) அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் பரிசோதித்து காட்டப்படும். தேர் தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தலை சுமுகமாக நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவ லர்களுக்கு அறிவுரைகள் வழங்கி யுள்ளோம். தேர்தல் பார்வையாளர் கள் இன்று (நேற்று) பணியை தொடங்கியுள்ளனர்.

தற்போது வரை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் ரூ.56 லட்சம் ரொக்கம், ரூ.27 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப் பிலான வெள்ளி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள், ரூ.14 லட்சம் மதிப் பிலான இதர பொருட்கள் ஆகி யவை ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் இது வரை பதியப்பட்ட வழக்குகள், புகார்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப் பியுள்ளோம். வழக்குகளில் தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

ஆணையத்துக்கு அறிக்கை

நாங்குநேரி தொகுதியில் ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் ரொக்கம் பறி முதல் செய்யப்பட்ட விவகாரத் தில், திமுக எம்எல்ஏ சரவண னுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ளோம். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சார பேச்சு குறித்த அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்ததும் தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பி வைப்போம்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத் தில் தமிழகம் முழுவதும் உள்ள 5 கோடியே 99 லட்சம் வாக்கா ளர்களில் 47.83 சதவீதம் பேர் தங்கள் விவரங்களை சரிபார்த் துள்ளனர். இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் 98.71 சதவீதம் வாக் காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனல் பறந்த பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி யில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புக ழேந்தி உட்பட 12 பேரும், நாங்கு நேரி தொகுதியில் அதிமுக வேட் பாளர் வி.நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் கடந்த ஒரு மாதத் துக்கு மேலாக 2 தொகுதிகளிலும் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

இதேபோல் விக்கிரவாண்டி திமுக வேட்பாளரை ஆதரித்தும், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பா ளரை ஆதரித்தும் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி தலை வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடைசி நாளான நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் விக்கிரவாண் டியிலும், அதிமுக கூட்டணிக் கட்சி யான தேமுதிகவின் தலைவர் விஜய காந்த் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை கிராமத்திலும் பிரச்சாரத்தை முடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x